
இயக்குனர் R கண்ணன் இயக்கத்தில் அதர்வா, மற்றும் நாயகி மேகா ஆகாஷ், நடிக்கும் ‘பூமராங்
இளமையான, சுவாரஸ்யமான தலைப்புகள் சினிமா ரசிகர்களின் கவனத்தை என்றுமே ஈர்க்கும். இயக்குனர் R கண்ணன்- அதர்வா கூட்டணி ரசிகர்கள் மற்றும் வணிக தரப்புகளில் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு 'பூமராங்' என தலைப்பிடப்பட்டுள்ளது.
'பூமராங் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று தொடங்கியது. இந்த பூஜையில் இயக்குனர் R கண்ணன், இப்படத்தின் கதாநாயகன் அதர்வா, கதாநாயகி மேகா ஆகாஷ், இப்படத்தில் முக்கிய துணை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் சுஹாசினி மணிரத்னம் மற்றும் இப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
'பூமராங்' சமுதாய கருத்துள்ள ஆக்ஷன் படமாகும். இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் உபன் படேல் சுவாரஸ்யமான வில்லின் வேடத்தில் நடிக்கவுள்ளார். சதிஷ் மற்றும் RJ பாலாஜி ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இப்படத்தை இயக்குனர் R கண்ணனி...