
பிரேக்கிங் நியூஸ் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகை பானுஸ்ரீ
நடிகை பானுஸ்ரீ மொழி மற்றும் எல்லைகள் கடந்து குறுகிய காலத்தில் மிகவும் பிரபலபமானவர். தமிழிலும் அவரது புகழை பரப்பியிருக்கிறது தெலுங்கு பிக்பாஸ் சீசன் 2. தற்போது நடிகர் ஜெய் நடிக்கும் "பிரேக்கிங் நியூஸ்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார்.
"இந்த படத்தில் நான் ஜெய்யின் காதலியாக நடிக்கிறேன், அவரது அப்பாவித்தனத்தால் அவர் மீது காதல் வயப்பட்டு, பின் அவரை திருமணம் செய்து கொண்டு, பின்னர் ஈகோ மற்றும் பிடிவாதத்தால் பிரிந்து விடும் கதாபாத்திரம். நான் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தால அதில் அடுக்குகள் இருக்கும். ஆரம்பத்தில், நான் துடுக்குத்தனமான மற்றும் உற்சாகமான ஒரு பெண்ணாக இருப்பேன். திருமணத்திற்கு பிறகு கலாச்சாரத்துடன் ஒன்றி வாழும் அமைதியான பெண்ணாக மாறி விடுவேன்" என்கிறார் பானுஸ்ரீ.
நாயகனை பிரிந்து விடுவேன் என அவர் கூறுவதற்கான காரணத்தை பற்றி ஆரவ்த்துடன் கேட்டால், சின்ன சிரிப்பு...