புரூஸ் லீ வாலிபர்களுக்கான படம் மட்டும் இல்லை குழந்தைகளுடன் சிரித்து மகிழவைக்கும்படம் – ஜி.வி.பிரகாஷ
டார்லிங் பேய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் முதல் படமே முதலுக்கு மோசமில்லாமல்
லாபகரமான வசூல் ஆனதால் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளர் - நடிகர் என்று இரட்டை வேடங்களில் பயணிக்க தொடங்கினார்
புதிதாக படம் எடுக்க வரும் தயாரிப்பாளர்கள், அறிமுக இயக்குனர்களுக்கு எளிதில் கிடைக்கும் கால்சீட் கதாநாயகன் ஆனார் பிரகாஷ். குறைந்த பட்ஜெட் நஷ்டம் என்றால் தப்பித்து விடும் வகையில் இருப்பதால் பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் விரும்பும் கதாநாயகனாக இன்றைக்கு ஜி.வி.பிரகாஷ் 10 படங்கள் வரை ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குை ர்கள் பாலா, வெற்றிமாறன், ராஜீவ் மேனன் ஆகியோர் இயக்கும் படங்களில் பிரகாஷ் நடிக்க விருப்பதால் நாளை வெளிவர உள்ள புரூஸ் லீ படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.தமிழகத்தில் தன்னெழுச்சியாக நடைபெற்ற ஜல்லிகட்டு, மீத்தேன் போராட்டங்களில் பிரகாஷ் குமார் பங்கெடுத்ததால் தமி...
