விவசாயிகளுக்கு ஒரு மாத வருமானத்தை வழங்கிய ‘கேஃபினோ தி கேம் யார்டு’..!
நண்பர்களுடன் சேர்ந்து சிறப்பான பொழுதுபோக்கு, விளையாட்டுகளுடன் கூடிய உணவகம் அல்லது காபி ஷாப் போகவேண்டும் என்று விரும்பினால், உங்களது தேர்வு நிச்சயம் சாலிகிராமத்தில் உள்ள ‘கேஃபினோ’வாகத் தான் இருக்கமுடியும். சென்னை சாலிகிராமத்தில் ‘கேஃபினோ’ தி கேம் யார்டு’ என்கிற பொழுதுபோக்கு மையம் கடந்த மாதம் துவங்கப்பட்டது.. இதனை இயக்குநர் மீரா கதிரவன், நடிகர் அபி சரவணன், நடிகை அதிதி ஆகியோர் கலந்துகொண்டு திறந்து வைத்தனர்.
அந்த சமயத்தில் நடிகர் அபிசரவணன் விவசாயிகளுக்கான போராட்டங்களில் முன்னின்று பங்கேற்று வந்தார். அவர்களுக்கு திரையுலக பிரபலங்கள் மூலமாக சிறுசிறு உதவிகளையும் செய்து கொடுத்து வந்தார். அதனால் இந்த ‘கேஃபினோ’ திறப்பு விழா நிகழ்விலும் விவசாயிகள் பற்றி பேசிய அபிசரவணன், இந்த ‘கேஃபினோ’வின் ஒரு மாத லாபத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை விவசாயிகளுக்கு அளித்தால் நன்றாக இருக்கும் என ஒரு கோரிக்கையையும் பேச்ச...
