படம் வெற்றி தான்… ஆனால் நான் சந்தோஷமாக இல்லை – புலம்பும் ‘பலூன்’ பட இயக்குநர்
ஜெய், அஞ்சலி, ஜனனி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பலூன்'. சினிஷ் இயக்கியிருந்த இப்படம் கடந்த டிசம்பர் 29-ம் தேதி வெளியானது. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்கள். ஆனால் படத்தின் இயக்குநர் மட்டும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் சினிஷ் இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ‘பலூன்’ வெற்றி... தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி... இருந்தாலும் தனிப்பட்ட முறையில் இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் சூழலில் நான் இல்லை.
சிலரது தேவையற்ற தலையீடு எனது உழைப்பை வீணாக்கிவிட்டது. திரைத்துறையின் தொழில் நடைமுறை தெரியாத சிலரால் பலூன் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. தாமதத்தால் படத்தின் பட்ஜெட் அதிகரித்தது. இதனால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் ஏற்பட்ட பொருள் நஷ்டத்திற்கு யாரோ ஒருவரை ...