Sunday, May 18
Shadow

ஜெய்யின் பலூனுக்கு கிடைத்த வரவேற்பு: சாட்டிலைட் உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்

புதுமுக இயக்குநர் சினிஷ் இயக்கியிருக்கும் படம் ‘பலூன்’.

ஜெய் – அஞ்சலி – ஜனனி ஐயர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் சாந்தினி தமிழரசன், யோகி பாபு, கார்த்திக் யோகி, ராஜ் தருண் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

காதல் கலந்த திகில் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஜெய் 3 வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

’70 எம் எம்’ நிறுவனத்தின் சார்பில் டி.என்.அருண் பாலாஜி – கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் ‘பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்’ நிறுவனம் சார்பில் திலீப் சுப்பராயன் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் வருகிற டிசம்பர் 29-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த படத்தின் திரையரங்கு உரிமையை ஆரா சினிமாஸ் கைப்பற்றியிருந்த நிலையில், தொலைக்காட்சி உரிமையை (Satellite Rights) ஜி தமிழ் அதிக விலைக்கு வாங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply