15 ஆயிரம் ரசிகர்களின் ஆரவாரத்தில் அதிர்ந்த எக்ஸ்பிரஸ் அவென்யூ… உலக இசை தினத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்றிய அனிருத்!
15 ஆயிரம் ரசிகர்களின் ஆரவாரத்தில் அதிர்ந்த எக்ஸ்பிரஸ் அவென்யூ... உலக இசை தினத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்றிய அனிருத்!
சென்னை: உலக இசை தினத்தை முன்னிட்டு சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ வளாகம் ஞாயிற்றுக்கிழமை மாலை இசை ரசிகர்களின் கொண்டாட்டக் களமாக மாறியது. ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்திரனின் ‘வைப் வித் அரவிந்த்’ நிகழ்ச்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டு வந்து, இசையின் மீதான தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.
மாலை நேரம் தொடங்கியதிலிருந்தே ரசிகர்களின் உற்சாகம் உச்சத்தில் இருந்தது. ‘மொட்டமாடி மியூசிக்’ குழுவின் நேரடி இசை நிகழ்ச்சியும், டிஜே தீபிகாவின் துள்ளலான இசையும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தின. அதன்பின் மேடைக்கு வந்த அனிருத்தை ரசிகர்கள் கரகோஷத்துடன் வரவேற்றனர்.
அவரது புதிய சுயாதீன பாடலான ‘அரவிந்த்’ மற்றும் பல சூப்பர் ஹிட் பாடல்களை நேரடியாக பாடிய அனிருத், ரசிகர்களை முழுமை...
