சர்ச்சை பேச்சு: ராதாரவிக்கு நடிகர் சங்கம் எச்சரிக்கை
நடிகர் ராதாரவியின் பேச்சை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது என்று தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், சமீபத்தில் நடந்த கொலையுதிர் காலம் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பெண்களை கொச்சைப்படுத்துவது போல் நீங்கள் பேசிய இரட்டை அர்த்த வசனங்களை கேட்டு உண்மையிலேயே மனது மிகவும் வருந்துகிறது. இதை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்த மேடையில் மட்டுமல்ல, பல காலங்களாக தங்களுடைய இணையதள நேர்காணலிலும், பொது மேடைகளிலும் திரைப்பட விழாக்களிலும் இதுபோல் இரட்டை அர்த்த வசனங்களையும், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள். இது ஊடகங்களின் மூலம் உலகெங்கும் பரவி வருகிறது.
இதுஒட்டுமொத்த திரைத்துறைக்கும், மற்ற நடிகர்களுக்கும் அதில் பங்காற்றக்கூடிய பெண்களுக்கும், ஒரு அவமான சூழ்நிலையையும், மன உளைச்சல...