“ஒரு சிறுவன்… ஒரு தேசிய உணர்வு!” – ‘ஃபிளாக்’ திரைப்படம் சர்வதேச கவனத்தை ஈர்த்த விதம்
“ஒரு சிறுவன்… ஒரு தேசிய உணர்வு!” – ‘ஃபிளாக்’ திரைப்படம் சர்வதேச கவனத்தை ஈர்த்த விதம்
சென்னை:
சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல, அது ஒரு உணர்வின் பிரதிபலிப்பாக மாறும் தருணங்கள் உண்டு. அந்த வகையில், ஒரு சிறுவனின் பார்வையில் இந்தியாவின் தேசிய உணர்வை சொல்ல முயலும் படைப்பாக உருவாகியுள்ளதே ‘ஃபிளாக்’ திரைப்படம்.
ஐ அண்ட் ஐ மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வைரப்பிரகாஷ் தயாரித்து, இயக்குநர் எஸ்.பி. பொன்சங்கர் இயக்கியுள்ள இந்த படம், அதன் உள்ளடக்கம் மற்றும் அணுகுமுறையால் ஆரம்பத்திலேயே கவனம் பெற்றுள்ளது. சமீபத்தில் இந்த திரைப்படம் 16வது தாதாசாகெப் பால்கே விருதைப் பெற்றிருப்பது, அதன் முக்கியத்துவத்தை மேலும் உயர்த்தியுள்ளது.
பத்திரிக்கையினருடன் பேசிய தயாரிப்பாளர் வைரப்பிரகாஷ், “இந்தியா முழுவதும் வாழும் 140 கோடி மக்களின் தேசிய உணர்வை ஒரு குழந்தையின் கதையின் மூலம் சொல்லும் முயற்சிதா...
