பிற மொழிகளில் பிஸியாகும் தன்ஷிகா மொழி தெரியாமல் தவிக்குறார்
கபாலி' படத்திற்கு பிறகு தன்ஷிகாவிற்கு படவாய்ப்புகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்
இந்நிலையில் இவர் தற்போது முதன் முறையாக கன்னடத்திலும், மலையாளத்திலும் நடித்து வருகிறார்
இவருக்கு மலையாளம் மற்றும் கன்னட மொழி தெரியாததை அடுத்து மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளாராம்?.
இதுகுறித்து தன்ஷிகா கூறுகையில்?, " மலையாளத்தில் நான் நடிக்கும் முதல் படம், சோலோ. இதில் 4 கதைகள். ஒரு கதையில் நானும், துல்கர் சல்மானும் இணைந்துள்ளோம்.
பார்வையிழந்த டான்சர் வேடத்தில் நடிக்கிறேன். ஓட்டல் அறையிலுள்ள கண்ணாடி முன் நின்று, இந்த வேடத்தை எவ்வளவு வித்தியாசமாகச் செய்யலாம் என்று ரிகர்சல் பார்த்த பிறகுதான் ஷூட்டிங்கிற்குச் செல்கிறேன். எனக்கு மலையாளம் தெரியாது. ஒரு வாரம் படமாக்கப்படும் காட்சிகளின் வசனங்களை முன்கூட்டியே வாங்கி, அதை தமிழில் எழுதி, பிறகு ஆங்கிலத்தில் அர்த்தம் புரிந்துகொண்டு நடிக்கிறேன்." என்று கூறினார்.
...
