
மீண்டும் தனுஷ்வுடன் ஜோடி சேரும் காஜல் அகர்வால்
தனுஷ் கடந்த ஆண்டு நடித்து திரைக்கு வந்த படம் ‘மாரி’. ஆட்டோ டிரைவராகவும், ரவுடியாகவும் மாறுபட்ட கெட்டப்பில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். பாலாஜி மோகன் இயக்கியிருந்தார். இப்படத்தின் 2ம் பாக ஸ்கிரிப்ட் எழுதி முடித்திருக்கிறார் இயக்குனர். அதற்கு தனுஷ் ஓ.கே சொல்லியிருப்பதுடன் ஸ்கிரிப்ட் புத்தகத்தை தனது இணைய தள டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டு உறுதி செய்திருக்கிறார். இதையடுத்து அடுத்த கட்ட பணிகளை இயக்குனர் தொடங்கி இருக்கிறார். வேலையில்லா பட்டதாரி 2ம் பாகத்தில் தற்போது நடித்து வருகிறார் தனுஷ். சவுந்தர்யா இப்படத்தை இயக்குகிறார்.
முதல்பாகத்தில் நடித்த அமலா பால் 2ம் பாகத்திலும் ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை முடித்தபிறகு மாரி 2ம் பாகத்தில் நடிக்க உள்ளார். முதல்பாகத்தில் காஜல் அகர்வால் நடித்திருந்ததால் அவரே 2ம் பாகத்திலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறத...