தனுஷ் தான் என் ரோல் மாடல்என்று சொல்லும் ஹிந்தி சூப்பர்ஸ்டார்
பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் கண் பார்வையற்றவராக நடித்துள்ள காபில் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழில் இப்படம் பலம் எனும் பெயரில் வெளியாகிறது. இந்த படத்துக்கு உலகம் முழுதும் மிகவும் ஒரு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.இந்த படத்தின் விளம்பரத்துக்காக ஒரு சில ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார் .
இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் ஹ்ரித்திக் ரோஷன், தனக்கு தனுஷ் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் என்றும் அவர் நடித்துள்ள படங்களை தான் விரும்பி பார்ப்பேன் எனவும் கூறியுள்ளார். அவரின் இயல்பான நடிப்பு என்னை மிகவும் கவரும் அது மட்டும் இல்லமால் அவர் தேர்ந்தடுக்கும் கதாபாத்திரம் என்னை மிகவும் கவரும் என்று மிகவும் புகழ்ந்தார் தமிழ் நடிகர்களில் அஜித் பிறகு ஒரு தமிழ் நடிகரை பிடிக்கும் என்று சொல்லும் வடஇந்திய நடிகர் இவர்...