17 வருட சினிமா பயணம் அனைவருக்கும் நன்றி சொன்ன தனுஷ்
தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை படம் மூலம் நடிகர் தனுஷ் அறிமுகமானார். அப்போது அவரை மிகவும் அலட்சியமாக பார்த்தனர் ஆனால் இன்று அவர் தமிழ் சினிமாவின் முன்னணி இல்லை தவிர்க்க முடியாத ஒரு சகலகலாவல்லவனாக தலை நிமிர்ந்து நிற்கிறார்.
நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பல திறமைகளை தனக்குள் அடக்கியுள்ள தனுஷ், சினிமாவில் அறிமுகமாகி இன்றுடன் 17 வருடங்கள் ஆகிறது.
மே 10, 2002ம் ஆண்டு அவர் நாயகனாக நடித்த 'துள்ளுவதோ இளமை' படம் வெளிவந்தது. அதன்பின் பல்வேறு விதமான படங்களில் நடித்து தன்னை வளர்த்துக் கொண்டார். ஹிந்தியிலும் அறிமுகமாகி அங்கும் வெற்றி பெற்றார், அமிதாப்பச்சனுடனும் சேர்ந்து நடித்தார். பிரெஞ்ச் மொழி படத்திலும் நடித்தார்.
'ஒய் திஸ் கொலவெறி' பாடலை எழுதி, பாடி உலகப் புகழ் பெற்றார். 'ப பாண்டி' படம் மூலம் இயக்குனர் ஆனார்.
'ஆடுகளம்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விர...