அடுத்த கட்டத்திற்கு செல்லும் துருவ நட்சத்திரம்
விக்ரம் கைவசம் கெளதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’, விஜய் சந்தரின் ‘ஸ்கெட்ச்’, ஹரியின் ‘சாமி ஸ்கொயர்’, ஆர்.எஸ்.விமலின் ‘மஹாவீர் கர்ணா’ என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக நிற்கிறது. இதில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர்.
மேலும், மிக முக்கிய வேடங்களில் இயக்குநர் பார்த்திபன், ராதிகா, சிம்ரன், வம்சி, திவ்யதர்ஷினி, மாயா ஆகியோர் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இதற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வருகிறார், பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘கொண்டாடுவோம் எண்டர்டெயின்மெண்ட் – எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனங்களுடன் இணைந்து இயக்குநர் கெளதம் மேனன் தனது ‘ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் மூலம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.
இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் மற்றும் இரண்டு ஸ்டைலிஷ் டீசர்கள் ரசிக...