
விக்ரம்- கவுதம் மேனன் பயங்கர மோதல் – நிறுத்தப்பட்ட துருவநட்சத்திரம்
வாலு பட இயக்குநர் விஜய்சந்தருக்குக் கொடுத்த கால்ஷீட்டை கேன்சல் பண்ணிவிட்டு, கௌதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடிக்கப்போனார் விக்ரம். துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம் நடிக்கும் அறிவிப்பு வெளியான தினங்களிலேயே அந்தப் படத்தின் டீஸரையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் கௌதம் மேனன்.
துருவ நட்சத்திரம் படத்தின் டீஸர் யு டியூபில் 65 லட்சம் ஹிட்ஸ்களைப் பெற்று மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வித்தியாசமான தோற்றத்துடன் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வந்தார் விக்ரம். வெளிநாட்டில் சில காட்சிகளை படமாக்கிவிட்டு பின்னர் ஊட்டி, குன்னூர் போன்ற இடங்களில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. கடந்த ஒருசில நாட்களாக இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெற்றது.
இந்நிலையில் தற்போது ‘துருவ நட்சத்திரம்’ படப்பிடிப்பு திடீரென நிறுத்த...