ஜூலியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக மாணவர்கள் பல போராட்டங்களை நடத்தினர். ஆனால் பலனளிக்கவில்லை. பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தும், தன்னால் நீட் தேர்வில் தேர்ச்சி அடைய முடியவில்லையே என்ற வருத்தத்தில், மாணவி அனிதா தற்கொலை செய்துக் கொண்டார்.
இவரது தற்கொலை தமிழ்நாட்டையே உலுக்கியது. அனிதா மரணமடைந்து தற்போது ஓராண்டு நிறைவு அடைந்துள்ள நிலையில், அவரது பெயரில் ஒரு படம் உருவாகவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படத்திற்கு ‘டாக்டர் எஸ்.அனிதா எம்பிபிஎஸ்’ என பெயரிட்டு, அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
இதில் அனிதா கதாபாத்திரத்தில் ஜல்லிக்கட்டு, பிக்பாஸ் புகழ் ஜூலி நடிக்கவுள்ளாராம். அனிதா வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளது. இந்நிலையில், அனிதா கதாபாத்...