தயாரிப்பாளர் ஆனார் நான் கடவுள் ராஜேந்திரன் “ எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா “
TN 75 KK.கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் திருமுருகன், பாலகிருஷ்ணன் மற்றும் நண்பர்கள் இணைந்து தயாரிக்கும் படம் “ எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா “
கதாநாயகனாக அகில் நடிக்கிறார். சதுரங்கவேட்டை இஷாரா நாயர், கமர்கட்டு படத்தில் நடித்த ரஹானா, சஹானா, கிருஷ்ணபிரியா என்ற புதுமுகம் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன், மனோபாலா, பாலாசிங், சிவசங்கர், சூப்பர் சுப்பராயன், கௌசல்யா, ஷகீலா ஆகியோர் நடிக்கிறார்கள்.
தினமும் சென்னைக்கு நூற்றுக்கணக்கான பேர் பிழைப்புக்காக பல ஊர்களில் இருந்து வருகிறார்கள் அப்படி வருகிறவர்களில் 100 பேராவது சினிமா கனவுகளுடன் வருகிறார்கள் அப்படி சினிமாவிற்காக வந்து வாய்ப்பு கிடைக்காமல் ஊருக்கே திரும்பிச் செல்லும் கதாப்பாத்திரம் தான் சஞ்சய் (அகில் ) ஊரில் பண்ணையாராக இருக்கும் நேசமணி ( நான் கடவுள் ராஜேந்திரன் ) அவரிடம் நடந்ததை சொல்கிறான் சஞ்சய்.
...
