இந்திய கால்பந்து ரசிகர்களை குறிவைக்கும் ZEE5… FIFA உலகக் கோப்பையுடன் பாய்சுங் பூட்டியா களமிறங்குகிறார்!
இந்திய கால்பந்து ரசிகர்களை குறிவைக்கும் ZEE5... FIFA உலகக் கோப்பையுடன் பாய்சுங் பூட்டியா களமிறங்குகிறார்!
இந்தியாவில் கால்பந்து ரசிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், FIFA World Cup 2026 போட்டிகளை முன்னிட்டு டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளங்கள் ரசிகர்களை கவரும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. அந்த வகையில், ZEE5 தனது கால்பந்து உள்ளடக்கத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்திய கால்பந்தின் அடையாளமாக விளங்கும் பாய்சுங் பூட்டியாவை நிபுணர் குழுவில் இணைத்துள்ளது.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாகக் கருதப்படும் FIFA World Cup 2026 போட்டிகளை இந்திய ரசிகர்களிடம் மேலும் நெருக்கமாக கொண்டு செல்லும் முயற்சியாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது. ஜூன் 11 முதல் போட்டிகளின் நேரலை ஒளிபரப்பு, முக்கிய தருணங்களின் ஹைலைட்ஸ் மற்றும் பிரத்யேக நிகழ்ச்சிகளை ZEE5 வழங்கவுள்ளது.
...
