ரத்தீந்தரன் பிரசாத் மற்றும் கர்நாடக சங்கீத வித்துவான் டி.எம்.கிருஷ்ணா இணைந்து ஒரு கலை
‘கொடைகானல் வொன்ட்’ புகழ் இயக்குனர் ரத்தீந்தரன் பிரசாத் மற்றும் கர்நாடக சங்கீத வித்துவான் டி.எம்.கிருஷ்ணா அவர்களும் இணைந்து ஒரு கலை படைப்பை தயாரித்து கொண்டு இருக்கிறார்கள். ஒரு வருடத்திற்கு முன் ரத்தீந்தரன் பிரசாத் அவர்கள் ராப் பாடகி சொஃபியா அஷ்ரஃப் அவர்களை கொண்டு இயக்கிய பாடல் காட்சி பல லட்ச காணல்கள் பதிவு செய்தது. அதை போன்று பல பாடல் படைப்புகளை இயக்கும் வாய்ப்புகள் வந்தாலும் இதுவே அவர் இன்னுமொரு கலைஞருடன் இணைந்து உருவாக்கும் படைப்பாகும்.
ராமன் மகாசெசெ விருது பெற்ற டி.எம்.கிருஷ்ணா அவர்கள் இசையிலும் மொழியிலும் செய்யும் பரிசோதனைனை மூலம் தன் கலையின் எல்லைகலை விரிவுபடுத்துபவர். கர்நாடக சங்கீதத்தை அனைத்து சாரரீடமும் கொண்டு சேர்பதின் முக்கியத்துவதை உணர்த்துபவர். இந்த மார்கழி மாதம் அனைத்து சபா நிகழ்வுகளிலும் பங்குகொள்ள மறுத்துள்ள டி.எம்.கிருஷ்னா அவர்களும், தன் படமான ‘இது வேதாளம் சொல்லும் கதை...
