விஜய்க்கு போட்டியாக பொங்கலுக்கு களமிறங்கும் ஜி.வி.பிரகாஷ்
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் குமார், தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான 'கடவுள் இருக்கான் குமாரு' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறாவிட்டாலும் வர்த்தக ரீதியில் நல்லவிதமாக அமைந்தது.
இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் 'புரூஸ்லீ' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதுதவிர 'ஈட்டி' புகழ் ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக்கை பொங்கலுக்கு வெளியிடப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது. புரூஸ்லி படத்துடன் பர்ஸ்ட் லுக்கும் வெளியாவதால் ஜி.வி.பிரகாஷ் ரசிகர்களுக்கு இது இரட்டை விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி.வி.பிரகாஷ் தற்போது 'அடங்காதே', '4ஜி', 'சர்வம் தாளமயம்' மற்றும் இரண்டு பெயரிடப்படாத படங்களில் நடித்து வருகிறார். விஜய் நடிப்ப...