50 நாட்கள் ஓடிய ‘கட்டா குஸ்தி 2’… வெற்றியை படக்குழுவுடன் பகிர்ந்து கொண்ட விஷ்ணு விஷால்
50 நாட்கள் ஓடிய ‘கட்டா குஸ்தி 2’... வெற்றியை படக்குழுவுடன் பகிர்ந்து கொண்ட விஷ்ணு விஷால்!
இன்றைய திரையுலக சூழலில் ஒரு திரைப்படம் வெளியாகி பல வாரங்கள் திரையரங்குகளில் தொடர்ந்து ஓடுவது அரிதாகி வரும் நிலையில், ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த வெற்றியை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினருடன் இணைந்து கொண்டாடும் வகையில், படத்தின் 50வது நாள் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்றது.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செல்லா அய்யாவு இயக்கியுள்ள இப்படம், முதல் பாகத்தைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்துள...
