தேவர் ஆட்டம் ஆடும் கவுதம் கார்த்திக்
`கொடிவீரன்' படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் அடுத்ததாக உருவாக இருக்கும் படத்தில் கவுதம் கார்த்திக் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். `தேவர் ஆட்டம்' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
இவர் ஏற்கனவே கவுதம் கார்த்திக்கின் `இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் `தேவர் ஆட்டம்' படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச்சில் தொடங்க இருக்கிறது. அதற்கான முதற்கட்ட பணிகளில் முத்தையா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்த படத்தில் இணையும் மற்ற கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. `முத்துராமலிங்கம்' படத்திற்கு பிறகு மீண்டும் கிராமத்து சாயலில் நடிக்க இருக்கிறார் கவுதம் கார்த்திக்.
வி...