
கவர்ச்சிகரமான சினிமா உலகின் யாருக்கும் தெரிந்திராத சில உண்மைகள் – யாதுமாகி நின்றால்
கவர்ச்சிகரமான சினிமா உலகில் யாருக்கும் தெரியாது மறைந்திருக்கும்,உலகம் தெரிந்து கொள்ள வேண்டிய கதை. இதன் அழுகுரல் உலகத்தால் கட்டாயம் கேட்கப்பட வேண்டும்.
ஒரு பெண் தன் அன்றாட வாழ்வில் சந்திக்கும் போராட்டங்களை மையகதையாக கொண்ட படம் தான் யாதுமாகி நின்றால். பின்னனி நடனம் ஆடும் பெண்களின் தினசரி வாழ்வில் நடக்கும் உண்மை கதைகளை அடிப்படையாக கொண்ட இப்படத்தை காயத்ரி ரகுராம் இயக்குகிறார்.
இந்த படம் சாதரண பின்னனி நடனமாடும் பெண்களின் மனதினுள் இருக்கும் கனவுகளையும், ஆசைகளையும் முதன் முதலில் தமிழ் சினிமாவில் சொல்லும் படமாகும்.
குடும்ப சூழ்நிலை காரணமாக நடனமாடும் பெண்ணாக தள்ளப்பட்ட பள்ளி செல்லும் சிறுமி, சாதரண கனவுகளோடும், ஆசைகளோடும் வாழ்க்கையை பயணிக்கிறாள். ஆனால், முற்றிலும் மாறாக உண்மையில் ஒருவரால் நினைத்து பார்க்க முடியாத கொடுமைகளும், அவலங்களும் அனுபவிக்கும் அவளது வாழ்க்கையே படத்தின் கதையாகும்...