
நடிகை காயத்ரிதிறந்து வைத்த ‘தி திக் க்ஷேக் ஃபேக்டரி’
பல்வேறு பொழுது போக்கு அம்சங்களை கொண்ட சென்னையில் நாசுவைக்கும் பெயர்போன பல உணவு விடுதிகளை காணலாம். அத்தகைய சென்னையின் இதய பகுதியில் இந்தியளவில் பிரசித்தி பெற்ற அதீத சுவை மிகுந்த மில்க் ஷேக் பானங்களை தயாரிக்கும் ‘தி திக் க்ஷேக் ஃபேக்டரி’(“The Thick Shake Factory” ) சென்னை நுங்கம்பாக்கம் காதர் நவாஸ் கான் சாலையில் அண்மையில் தொடங்கப்பட்டது.
திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் இத்துவக்க விழாவில் பங்கேற்றனர். நடிகை காயத்ரி , ஸ்ரீனிவாஸ், கலை இயக்குனர் லால்குடி இளையராஜா, வாலு பட இயக்குனர் விஜய் சந்தர். திக் ஷேக் நிறுவனம் யஷ்வந்த் நாக் மற்றும் அஷ்வின் இருவரால் 2013 ஆம் ஆண்டு ஹைதராபாதில் நிறுவப்பட்டது. பின்னர் பெங்களூரு, மும்பை, கோவை என பல நகரங்களில் தங்களின் தனிபெரும் சுவையால் மக்களின் அமோக வரவேற்பை பெற்ற பல்வேறு கிளைகளை கொண்ட தொடர் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
இளைஞர்கள் பட்டாளத்தை ஈர்க்...