Saturday, November 7
Shadow

Tag: GDN movie

“கவுண்டமணி சாயலில் காமெடி… வில்லத்தனத்திலும் ஒரு ரசனை!” – நடிகர் அப்துல் லீ

“கவுண்டமணி சாயலில் காமெடி… வில்லத்தனத்திலும் ஒரு ரசனை!” – நடிகர் அப்துல் லீ

Latest News, Top Highlights
“கவுண்டமணி சாயலில் காமெடி… வில்லத்தனத்திலும் ஒரு ரசனை!” – நடிகர் அப்துல் லீ சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆசையுடன் பயணத்தைத் தொடங்கியவர் நடிகர் அப்துல் லீ. யூடியூப் ஸ்கெட்ச் வீடியோக்களில் தொடங்கிய இவரது நடிப்பு பயணம், தற்போது வெள்ளித்திரை மற்றும் இணையத்தொடர்கள் என அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்து வருகிறது. ‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள அப்துல் லீ, தன்னுடைய நடிப்புக்கு முக்கிய உந்துசக்தியாக இருப்பவர்கள் நடிகர்கள் கவுண்டமணி மற்றும் பாலையா என்கிறார். குறிப்பாக, நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தபோதும் அதற்குள் இருக்கும் எதிர்மறை தன்மையை வெளிப்படுத்தி, ரசிகர்களை ஒரே நேரத்தில் சிரிக்கவும் ரசிக்கவும் வைத்த அவர்களது பாணி தன்னை மிகவும் கவர்ந்ததாகக் கூறுகிறார். அப்துல் லீ என்ற பெயரில் இருக்கும் ‘லீ’ கூட அவருடைய திரைப்பயணத்தி...
IMDb எதிர்பார்ப்பு பட்டியலில் டாப்-3-ல் ‘ஜி.டி.என்.’… ஆர். மாதவனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

IMDb எதிர்பார்ப்பு பட்டியலில் டாப்-3-ல் ‘ஜி.டி.என்.’… ஆர். மாதவனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

Latest News, Top Highlights
IMDb எதிர்பார்ப்பு பட்டியலில் டாப்-3-ல் ‘ஜி.டி.என்.’... ஆர். மாதவனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு! சென்னை: ஆர். மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜி.டி.என்.’ திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த எதிர்பார்ப்பை உறுதிப்படுத்தும் வகையில், IMDb வெளியிட்டுள்ள "Most Anticipated New Indian Movies and Shows" பட்டியலில் 11.1% ரியல் டைம் பிரபலத்தன்மை மதிப்பெண்ணுடன் மூன்றாவது இடத்தை இந்த திரைப்படம் பிடித்துள்ளது. இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளரும் தொழில்துறை முன்னோடியுமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம், ஆரம்ப அறிவிப்பிலிருந்தே நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அறிவியல், தொழில்நுட்பம் ம...