Saturday, September 5
Shadow

“கவுண்டமணி சாயலில் காமெடி… வில்லத்தனத்திலும் ஒரு ரசனை!” – நடிகர் அப்துல் லீ

“கவுண்டமணி சாயலில் காமெடி… வில்லத்தனத்திலும் ஒரு ரசனை!” – நடிகர் அப்துல் லீ

சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆசையுடன் பயணத்தைத் தொடங்கியவர் நடிகர் அப்துல் லீ. யூடியூப் ஸ்கெட்ச் வீடியோக்களில் தொடங்கிய இவரது நடிப்பு பயணம், தற்போது வெள்ளித்திரை மற்றும் இணையத்தொடர்கள் என அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்து வருகிறது.

‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள அப்துல் லீ, தன்னுடைய நடிப்புக்கு முக்கிய உந்துசக்தியாக இருப்பவர்கள் நடிகர்கள் கவுண்டமணி மற்றும் பாலையா என்கிறார். குறிப்பாக, நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தபோதும் அதற்குள் இருக்கும் எதிர்மறை தன்மையை வெளிப்படுத்தி, ரசிகர்களை ஒரே நேரத்தில் சிரிக்கவும் ரசிக்கவும் வைத்த அவர்களது பாணி தன்னை மிகவும் கவர்ந்ததாகக் கூறுகிறார்.

அப்துல் லீ என்ற பெயரில் இருக்கும் ‘லீ’ கூட அவருடைய திரைப்பயணத்தின் ஒரு சுவாரஸ்யமான அடையாளம். உலக சினிமாவின் பிரபல ஆளுமைகளான ஸ்டான் லீ மற்றும் ஸ்பைக் லீ ஆகியோரின் பெயர்களால் ஈர்க்கப்பட்டு, தனது பெயருடன் ‘லீ’ என்பதை இணைத்துக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

நடிப்புக்கு வருவதற்கு முன்பே யூடியூப் ஸ்கெட்ச் வீடியோக்கள் மூலம் தனது காமெடி டைமிங்கையும் நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தி வந்த அப்துல் லீ, அதன்மூலம் கிடைத்த அனுபவமே சினிமாவிலும் தனக்கு உதவியதாகக் கருதுகிறார்.

வேலம்மாள் பள்ளியின் முன்னாள் மாணவரான இவர், பி.இ. பட்டதாரி. இதுவரை 35-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அப்துல் லீ, சமீபத்தில் வெளியான ‘ஜி.டி.என்.’, ‘கட்டா குஸ்தி 2’ உள்ளிட்ட படங்களிலும், ‘ஹார்ட் பீட்’, ‘லோக்கல் டைம்ஸ்’ போன்ற இணையத்தொடர்களிலும் நடித்துள்ளார்.

‘மொத ராத்திரி’ படத்தில் கண்ணன் கதாபாத்திரம் தனக்கு கிடைத்த முக்கியமான வாய்ப்புகளில் ஒன்று எனக் கூறும் அப்துல் லீக்கு, இந்தப் படத்தின் மூலம் கிடைத்த பாராட்டு இன்னும் சிறப்பு. திரைப்படத்தைப் பார்த்த நடிகர் சூரி, “திரையில் உங்களைப் பார்த்தபோது என் மாமா நினைவுக்கு வந்தார்” என்று கூறியதை நினைவுகூரும் அவர், சூரியின் இந்தப் பாராட்டை தனது திரைப்பயணத்தில் மறக்க முடியாத தருணமாகக் குறிப்பிடுகிறார்.

இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பளித்து தன் மீது நம்பிக்கை வைத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர் ராஜா கருப்புசாமி ஆகியோருக்கு அப்துல் லீ தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘மொத ராத்திரி’ படத்தின் கதாநாயகன் ரிஷிகாந்துக்கும் தனக்கும் 13 ஆண்டுகளுக்கும் மேலாக நட்பு இருப்பதாகக் கூறும் அப்துல் லீ, அந்த நட்பு இந்தப் படத்திலும் மிகப்பெரிய ஆதரவாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதுவரை காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமல்லாமல், குணச்சித்திரம் மற்றும் எதிர்மறை கதாபாத்திரங்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வரும் அப்துல் லீ, இனி ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் சிக்கிக் கொள்ளாமல், வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்கிறார்.

யூடியூப் ஸ்கெட்ச்களில் தொடங்கிய பயணம், 35-க்கும் மேற்பட்ட படங்கள் வரை வந்திருக்கும் நிலையில், ‘மொத ராத்திரி’ மூலம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறார் அப்துல் லீ. கவுண்டமணியை இன்ஸ்பிரேஷனாகக் கொண்ட இவரது காமெடி பயணம், இனி சினிமாவில் எந்த மாதிரியான கதாபாத்திரங்களை நோக்கிச் செல்கிறது என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

“Goundamani Is My Inspiration”: Actor Abdul Lee on Comedy, Character Roles and His Journey in Cinema

For actor Abdul Lee, the journey into cinema began with comedy sketches on YouTube. Today, he has gradually made his presence felt across Tamil films and web series, with his performance as Kannan in Motha Raathiri becoming one of his recent highlights.

Interestingly, Abdul Lee says that legendary comedian Goundamani and veteran actor-director T. K. Balachandran, popularly known as Balaiah, are among his biggest inspirations. What fascinates him most about their performances is their ability to bring shades of negativity even into comic characters, while still making audiences laugh and enjoy the scenes.

The name ‘Lee’ in Abdul Lee’s name also has an interesting story behind it. Inspired by two legendary personalities, Stan Lee and Spike Lee, he decided to add ‘Lee’ to his own name.

Abdul Lee began his acting journey through YouTube sketch videos, where he got the opportunity to develop and showcase his comic timing and acting skills. The experience eventually paved the way for opportunities in films and digital entertainment.

A former student of Velammal School, Abdul Lee holds a B.E. degree and has acted in more than 35 films so far. His recent credits include G.D.N. and Gatta Kusthi 2, apart from web series such as Heartbeat and Local Times.

His role as Kannan in Motha Raathiri has also brought him a memorable compliment from actor Soori. After watching the film, Soori reportedly told him, “When I saw you on screen, you reminded me of my uncle.” Abdul Lee says that receiving such appreciation from Soori was particularly special to him.

Abdul Lee has expressed his heartfelt gratitude to the producers of Mythri Movie Makers and director Raja Karuppusamy for giving him the opportunity to be part of Motha Raathiri and placing their trust in him.

He also shares a long-standing friendship with the film’s lead actor Rishikanth, with the two having known each other for more than 13 years. According to Abdul Lee, Rishikanth’s support during the making of the film was something he will always remember.

With Motha Raathiri, Abdul Lee hopes to take his career to the next level. While comedy remains close to his heart, he is keen to explore a wider range of roles, including character-driven and negative shades.

From YouTube sketches to more than 35 films, Abdul Lee’s journey has been one of steady progress. With legendary performers like Goundamani serving as his inspiration, the actor is now looking forward to creating his own identity through comedy, character roles and challenging performances on screen.