
ஞானவேல்ராஜா மற்றும் சூர்யா மோதல் உண்மை நிலவரம்
சூர்யா குடும்பத்தில் இருந்து வந்த முதல் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா என்பவராகும். ஸ்டுடியோ க்ரீன் என்ற நிறுவனம் சார்பில் சூர்யாவை வைத்து இவர் பல படங்கள் தயாரித்திருப்பதோடு, பிற நடிகர்களை வைத்தும் படங்கள் தயாரித்து வருகிறார். இதையடுத்து சூர்யா குடும்பத்தில் இருந்து எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட பலர் படம் தயாரிக்க தொடங்கியுள்ளார்கள்.
இந்த நிலையில், பிற நடிகர்களை வைத்து ஞானவேல்ராஜா தயாரித்த பல படங்கள் தோல்வியடைந்த நிலையில், அவர் பல கோடி கடனாளியாகிவிட்டாராம். இருந்தாலும், இந்த கடன் அனைத்தும் சூர்யா குடும்பம் மீது விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஞானவேல்ராஜாவை சூர்யா குடும்பத்தினர் விரட்டியடித்துவிட்டனர் என்றும் கூறப்படுகிறது.
என்னதான் ஞானவேல்ராஜா தயாரிப்பாளராக இருந்தாலும், சூர்யா குடும்பத்தார் சொல்படி தான், அவர் படங்களை தயாரித்து வந்தார். ஆனால், தற்போது சூர்யா குடும்பத்தினர் பேச்சை கேட்...