Friday, February 7
Shadow

Tag: #gopininar #gvprakash #boxing #northmadras

குத்து சண்டை வீரராக நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார்

குத்து சண்டை வீரராக நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார்

Latest News, Top Highlights
பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'நாச்சியார்'. இதற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. தற்போது புதிதாக கோபி நயினார் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தின் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஜி.வி.பிரகாஷ். முழுக்க வட சென்னையை களமாகக் கொண்ட இப்படத்தின் முதல்கட்ட வேலையில் இறங்கியிருந்தார் கோபி நயினார். இதில் குத்துச்சண்டை முக்கிய அம்சமாக இடம்பெறும் எனத் தெரிகிறது. ‘செம’, ‘100 % காதல்’, ‘அடங்காதே’, ‘ஐங்கரன்’, ‘ரெட்ட கொம்பு’ ஆகிய படங்களில் ஜி.வி.பிரகாஷ் கவனம் செலுத்தும் சூழலில், இப்படம் ஆக்ஷன் கலந்த பொழுதுபோக்கு பின்னணியில் தயாராக உள்ளது. இப்படத்தின் குத்துச்சண்டை காட்சிகளுக்காக ஜி.வி.பிரகாஷ் பிரத்யேகமாக பயிற்சி பெற உள்ளார்....