
குழந்தைகளின் விடுமுறை கொண்டாட்டம் தான் ஜீவாவின் “கொரில்லா”
குழந்தைகளை கவரும் வகையில் வெளிவரும் படைப்பு எதுவாக இருந்தாலும் நிச்சயம் அது குடும்பங்களையும் கவரும். அப்படி குழந்தைகள் முதல் குடும்ப உறுப்பினர்கள் வரை அனைவரையும் திருப்தி படுத்தும் விதமாக உருவாகி இருக்கிறது ஜீவா நடித்து, டான் சாண்டி இயக்கியுள்ள கொரில்லா திரைப்படம். பேப்பரில் இருக்கும் கதையை அப்படியே ஸ்கிரீனில் கொண்டு வருவதற்கு அசாத்தியமான கலை விரும்பி ஒருவர் தயாரிப்பாளராக இருக்க வேண்டும். கொரில்லாவின் தயாரிப்பாளர் ஆல் இன் பிக்சர்ஸ் விஜய் ராகவேந்திரா அத்தகையவர் தான். அது படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவில் தெரிந்தது.
சென்னையில் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இவ்விழாவில் படக்குழு உள்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இயக்குநர் ராஜேஷ்செல்வா பேசியாதாவது,
"இந்தப்படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என் படத்திலும் வொர்க் பண்ணி இருக்கிறார்கள். அதனால் இந்தப்ப்படத்தைப் பற்றி எனக்கு...