
ஜீவா படம் மூலம் மீண்டும் பீட்டா தமிழ் நாட்டில் என்ட்ரி
தமிழகத்தில் இன்று நடக்கும் பல தன்னெழுச்சிப் போராட்டங்களுக்குப் பெரும் முன்னுதாரணமாக இருந்தது, மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரிய போராட்டம். அந்தப் போராட்டத்துக்கு வித்தாய் அமைந்தது, சர்வதேச விலங்கு ஆர்வலர் அமைப்பான பீட்டா. தமிழக மக்களின் உணர்வை மதித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் தை மாதத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகம் பக்கம் மீண்டும் சற்று எட்டிப் பார்த்திருக்கிறது, பீட்டா இந்தியா அமைப்பு. தற்போது, ஜீவா நடித்துவரும் 'கொரில்லா' படத்தில் 'காங்' என்ற சிம்பன்ஸியை நடிக்க வைத்துள்ளனர். இந்தக் காட்சிகளை தாய்லாந்தில் பிரத்யேகமாகப் படம்பிடித்து வந்தனர். இந்நிலையில், பீட்டாவின் இந்திய அலுவலர் சச்சின் பங்கேரா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், " 'கொரில்லா' படத்தின் இயக்குநர் டான் சாண்டியை உண்மையான சிம்பன்ஸியை வைத்துப் படமாக்குவதை குறைத்துக்கொண்டு...