Tag: #Gulaebaghavali #Hansika Motwani #prabhudeva #kalyan

ஹன்சிகாவுக்கு என் மீது கோவம் மனம் திறந்த பிரபுதேவா
பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகும் படங்களில் குலேபகாவலியும் சேர்ந்துள்ளது. பிரபு தேவா, ஹன்சிகா ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்தை கல்யாண் இயக்கியுள்ளார்.
விவேக் மெர்வின் இசையில் சமீபத்தில் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குலேபகாவலி என ஏற்கனவே எம்.ஜி.ஆர் நடிப்பில் படம் வெளியானலும் அதற்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லையாம்.
ஆனால் அதை போலவே இதுவும் ஒரு ட்ராவல் ஸ்டோரி. புதையலை தேடி ஹீரோ, ஹீரோயின் செல்வார்களாம். மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு என பலர் நடித்துள்ள இப்படத்தில் ஹன்சிகா ஒரு கிளப் டான்சராக வருகிறாராம்.
முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடிச்சிருக்கோம். இதுக்கு முன்பு ஹன்சிகாவை வைத்துப் படம் இயக்கியிருக்கிறேன். அப்போ எல்லாமும் சரியா நடக்கணுமே என்று இயக்கத்தில் கவனமாவும் கண்டிப்பாவும் இருப்பேன். அதனால அப்போ என் மேல அவங்களுக்கும் கொஞ்சம் கோபம். ஆனா நடிப்புன்னு வந...