குலு குலு திரைவிமர்சனம் (ரேட்டிங் 3.5/5)
ரத்னகுமார் இயக்கத்தில் முதல் முறையாக சந்தானம் நடித்து இன்று வெளிவந்துள்ள திரைப்படம் குலு குலு. இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ரத்னகுமார் மற்றும் சந்தானத்தின் கூட்டணியில் உருவாகியுள்ள குலு குலு படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.
அமேசான் காட்டில் பிறந்த கூகுள் { சந்தானம் } அங்கு ஏற்படும் பிரச்சனைகளின் காரணமாக தனது தாய்யை இழக்கிறார். இதுமட்டுமின்றி அங்கிருந்து கடற்கொள்ளையர்களால் கடத்தப்படும் கூகுள் வெவ்வேறு நாட்டில் நாடோடியாக பயணம் செய்து இளைஞன் ஆனதும் சென்னையில் தனக்கென்று ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அங்கேயே வாழ்ந்து வருகிறார்.
உதவி என்று யார் வந்து கேட்டாலும் எதையும் எதிர்பார்க்காமல் செய்கிறார் கூகுள். இப்படி சென்ற இடமெல்லாம் யாருக்காவது உதவி செய்துகொண்டே இருக்கும் கூகுளிடம் ஒரு நாள், தங்களது நண்பன் கடத்தப்பட்டுவிட்டான் என்று கூறி உதவி கேட்டு சில இளைஞர்க...
