Monday, June 10
Shadow

Tag: #GVPrakash

இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் பிறந்த தினம்

இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் பிறந்த தினம்

Latest News, Top Highlights
தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரான இவர் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானுடைய அக்காவின் மகனும் ஆவார். எஸ். சங்கரின் தயாரிப்பிலும், வசந்தபாலனின் இயக்கத்திலும் உருவானதும், விமர்சகர்களால் பாராட்டப்பட்டதுமான வெயில் என்னும் திரைப்படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இவர் இசையமைத்த கிரீடம் திரைப்படப் பாடல்களும் பலத்த வரவேற்புப் பெற்றவையாகும். தமிழ்த் திரைப்படத்துறையில் இவர் ஒரு கடின உழைப்பாளியாக விளங்குகிறார். ஏ. ஆர். ரஹ்மானின் இசையமைப்பில் உருவான ஜென்டில்மேன் தமிழ்த் திரைப்படத்தில் ஒரு பாடகனாக இவர் திரைப்படத் துறையில் காலடி வைத்தார். ரஹ்மானின் வேறு படங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார். இவர் இசையமைத்துள்ள திரைப்படங்கள் வெயில், கிரீடம், பொல்லாதவன், நான் அவள் அது, சேவல், அங்காடி தெரு, ஆயிரத்தில் ஓருவன், இரும...
இறுதிகட்டப் படப்பிடிப்பில் சர்வம் தாளமயம்

இறுதிகட்டப் படப்பிடிப்பில் சர்வம் தாளமயம்

Latest News, Top Highlights
'அடங்காதே', '4ஜி', 'ஐங்கரன்', 'குப்பத்து ராஜா', '100% காதல்', 'நாச்சியார்' ஆகிய படங்களைத் தொடர்ந்து ராஜீவ்மேனன் இயக்கத்தில் 'சர்வம் தாளமயம்' படத்தில் நடிக்கத் தொடங்கினார் ஜி.வி.பிரகாஷ். 'மின்சார கனவு' மற்றும் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' ஆகிய படங்களைத் தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கும் 3-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ட்ரம்ஸ் வாத்திய கலைஞராக நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது ராஜஸ்தான் சுற்றியுள்ள பகுதிகளில் பாடல் ஒன்றை படமாக்கவுள்ளார்கள். அதோடு ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவு பெறவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். 9 பாடல்கள் கொண்ட இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். நாயகியாக அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் ஜி.வி.பிரகாஷுடன் நடித்துள்ளனர். இப்படத்தைத் தொடர்ந்து சசி இயக்கத்தில் ...
பேருந்து கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: ஜி.வி.பிரகாஷ்

பேருந்து கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: ஜி.வி.பிரகாஷ்

Latest News, Top Highlights
தமிழகத்தில் அரசுப் பேருந்துகளின் கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அரசு பேருந்துகளில் பயணம் செய்வோர் தங்களின் மாதாந்திர சம்பளத்தில் 25 சதவீதத்தை அரசு பேருந்து கட்டணத்துக்கு செலவிடும் சூழல் உருவாகியுள்ளது. ஏற்கெனவே பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு போன்றவற்றால் கடும் இன்னலுக்கு ஆளாகிவரும் பொதுமக்கள், தற்போது இந்த பேருந்து கட்டண உயர்வால் மேலும் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில், பேருந்து கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்யக் கோரி ஜி.வி.பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், "விவசாய ஏழை எளிய உழைக்கும் பாட்டாளி மக்கள் தாங்கமுடியாத பேருந்து கட்டண உயர்வு சுமையை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்....
பாடகி சைந்தவியின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய ஜி வி!

பாடகி சைந்தவியின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய ஜி வி!

Latest News, Top Highlights
ஜி.வி.பிரகாஷ்குமார் மனைவி மற்றும் ( Carnatic music ) பாடகருமான "சைந்தவி" இவர் அந்நியன் படத்தில் ரண்டக்க, தொட்டிஜெயா படத்தில் Achu vella karumbae, அழகிய தமிழ் மகன் படத்தில் Kelamal Kaiyile, வரலாறு படத்தில் Innisai Alabedaiye, பையா படத்தில் Adada Mazhaida, சுறா படத்தில் Thanjavoor Jillakkari, மதராசபட்டினம் படத்தில் Aaruyire Aaruyire, மாப்பிளை படத்தில் Ready Readya மற்றும் Onnu Rendu, தெய்வத்திருமகள் படத்தில் Vizhigalil Oru Vaanavili, மயக்கம் என்ன படத்தில் Pirai Thedum, சுந்தரபாண்டியன் படத்தில் Nenjukkulle, தலைவா படத்தில் Yaar Indha Saalai Oram, ராஜா ராணி படத்தில் Nee Yaaro Yaaro, தெகிடி படத்தில் Vinmeen Vithayil, த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் Yennachu Yedhachu, சேதுபதி படத்தில் Hawa Hawa, தேறி படத்தில் En Jeevan, இது போன்ற பல வெற்றி பாடல்களை பாடிய சிங்கர் "சைந்தவி" ( 03.January.2018 ...
கன்னியாகுமரி மக்களை நேரில் சென்று ஆறுதல் கூறிய ஆரி, ஜி.வி.பிரகாஷ்

கன்னியாகுமரி மக்களை நேரில் சென்று ஆறுதல் கூறிய ஆரி, ஜி.வி.பிரகாஷ்

Latest News, Top Highlights
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று நடிகர் ஆரி மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆறுதல் கூறியுள்ளனர். அவர்களை சந்தித்தப்பின் அவர்கள் கூறியதாவது, ‘நாங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று ஆறுதல் கூற வந்தோம். ஆனால் இங்கே இதுவரை மொத்தம் 60க்கும் மேற்பட்ட மக்கள் இறந்ததாக கூறுகிறார்கள். சின்னதுறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ரெம்யாஸ், ரஜுஸ்,ஜெயின், ஆண்டனி என நால்வர் உயிர் இழந்துள்ளனர். அந்த குடும்பத்தில் அனைத்து ஆண்களும் இறந்துவிட்டார்கள். அவர்களை பார்க்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது. இதுவரை 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் வீடு திரும்பவில்லை. என்று கூறும் போது மனது படபடக்கிறது. மீனைத்தேடி கடல் சென்றவர்கள் பிணங்களாக வருகிறார்கள்​. இவர்களின் வாழ்வாதாரமே இந்த மீன்பிடி தொழில்தான். ஆனால் முறையான தொழில் நுட்பம் இல்லாமல் கடலில் சென்றதால் இம்மாவட்டத்தின் ப...