கல்லூரி இளைஞனாகத் தொடங்கி குடும்பத் தலைவனாக மாறும் வாழ்க்கைப் பயணம்! – நடிகர் ஏகன்
கல்லூரி இளைஞனாகத் தொடங்கி குடும்பத் தலைவனாக மாறும் வாழ்க்கைப் பயணம்! – நடிகர் ஏகன்
காதல், நகைச்சுவையுடன் உறவுகளின் மாற்றங்களையும் பேசும் ‘ஹைக்கூ’ திரைப்படம் அக்டோபர் 23-ல் உலகம் முழுவதும் வெளியீடு!
ஒரு மனிதனின் வாழ்க்கையில் காலம் ஏற்படுத்தும் மாற்றங்கள், வயதுக்கு ஏற்ப மாறும் சிந்தனைகள், காதல் மற்றும் குடும்ப உறவுகளின் முக்கியத்துவம் எனப் பல்வேறு உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹைக்கூ’. யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் ஏகன் கதாநாயகனாக நடித்துள்ளார். இத்திரைப்படம் அக்டோபர் 23-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
கல்லூரி மாணவனின் துடிப்பான இளமைப் பருவத்தில் தொடங்கி, வாழ்க்கையின் அனுபவங்களால் பக்குவமடைந்த குடும்பத் தலைவனாக மாறும் ஒரு மனிதனின் பயணத்தை இப்படம் பதிவு செய்கிறது. கல்லூரிப் பின்னணியில் உருவாகியிருந்தாலும், இளமைக்கே உரிய...
