கதை நாயகியாக களம் இறங்கும் ஹன்சிகா
தமிழ் சினிமாவுக்கு எப்போதும் நல்ல திறமையாளர்களை அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் இருக்கும் ஜியோஸ்டார் எண்டர்பிரைசஸ், ஹன்சிகா மோத்வானி நாயகியாக முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் புதிய பெயரிடப்படாத படத்தை அறிவித்திருக்கிறது. இதுவரை ஜாலியான பெண் கதாபாத்திரங்களையே ஏற்று நடித்து வந்த ஹன்சிகா, மிகுந்த ஈடுபாடும், அர்ப்பணிப்பும் உள்ள ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். மனிதநேய செயல்களுக்கு பெயர் போன இந்த அழகு நடிகை இந்த சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நேர்த்தியாக நடிப்பதற்காக தற்போது ஹோம் வொர்க் செய்து வருகிறார்.
நாயகியை மையப்படுத்தி சுழலும் இந்த திரில்லர் கதையில் மிகவும் பவர்ஃபுல்லான நடிப்பை வெளிப்படுத்த இருக்கிறார் ஹன்சிகா. மசாலா படம், ரோமியோ ஜூலியட், போகன் படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்த ஜமீல் கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்குகிறார். வணிக மற்றும் தொழில்நுட்ப விஷயங்களுக்கு முக்கியத்த...