Thursday, January 16
Shadow

Tag: #hari #vikram #trisha #priyan #

ஏப்ரல் மாதம் தொடங்கும் சாமி – 2  பட வேலைகள் ஹரி அறிவிப்பு

ஏப்ரல் மாதம் தொடங்கும் சாமி – 2 பட வேலைகள் ஹரி அறிவிப்பு

Latest News
'இருமுகன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், 'சாமி 2' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். சூர்யாவின் 'சி 3' பணிகளை முடித்துவிட்டு, 'சாமி 2' பணிகளில் கவனம் செலுத்துவார் ஹாரி என்று தகவல் வெளியானது. ஆனால், விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகும் படம் மற்றும் கெளதம் மேனனின் 'துருவ நட்சத்திரம்' ஆகிய படங்களில் ஒப்பந்தமானார் விக்ரம். இதனை முன்வைத்து 'சாமி 2' கைவிடப்பட்டது என்று தகவல்கள் வெளியானது. இது குறித்து படக்குழுவிடம் கேட்ட போது, "'சாமி 2' பணிகள் ஏப்ரம் மாதம் முதல் துவங்கும். தற்போது முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், கதை மற்றும் திரைக்கதையை இறுதி செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார் இயக்குநர் ஹரி" என்று தெரிவித்தார்கள். மேலும், கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள 'துருவ நட்சத்திரம்' பணிகள் இம்மாதத்தில் துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது....