“உணவுத் தட்டில் மறைந்திருக்கும் நஞ்சு! ‘தி இந்தியா ஸ்டோரி’ டீசர் எழுப்பும் அதிர்ச்சி கேள்விகள்”
“உணவுத் தட்டில் மறைந்திருக்கும் நஞ்சு! ‘தி இந்தியா ஸ்டோரி’ டீசர் எழுப்பும் அதிர்ச்சி கேள்விகள்”
பொதுவாக சமூக பிரச்சினைகளை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது அரிது. ஆனால், நம் அன்றாட வாழ்க்கையுடன் நேரடியாக தொடர்புடைய ஒரு பிரச்சினையை திரையில் பேசத் துணிந்துள்ளது ‘தி இந்தியா ஸ்டோரி: ஸ்லோ பாய்சன் இன் புரோகிரஸ்’ திரைப்படம். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர், நாம் சாப்பிடும் உணவின் பாதுகாப்பு குறித்து சிந்திக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
பூச்சிக்கொல்லி மருந்துகளின் அதிகப்படியான பயன்பாடு விவசாயத்தில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது, அதன் விளைவுகள் மனிதர்களின் உடல்நலத்தில் எவ்வாறு பிரதிபலிக்கின்றன என்பதையே இப்படம் மையக் கருத்தாக எடுத்துக் கொண்டுள்ளது. குறிப்பாக, குழந்தைகள் மற்றும் இளம் தலைமுறையினரின் எதிர்கால ஆரோக்கியம் குறித்து பல முக்கியமான கேள்விக...
