Friday, February 7
Shadow

Tag: Honour

சர்வதே விருதை வென்றார்  இசையமைப்பாளர் ஜிப்ரான்

சர்வதே விருதை வென்றார் இசையமைப்பாளர் ஜிப்ரான்

Latest News, Top Highlights
இசையமைப்பாளர் ஜிப்ரான், தனது அதீதமான இசையால் நம் மனதை துளையிட்டு அதன் அடி ஆழத்துக்கு இழுத்து செல்வார். பல அடுக்குகளை கொண்ட அவரது பாடல்கள் மிக சிறப்பாக இசை ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. கொண்டாட்டங்கள் என்பது தாய்நாட்டில் மட்டுமல்ல, அவை நாடு மற்றும் மொழி எல்லைகளுக்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன. இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு இது மிக மகிழ்ச்சியான, கொண்டாட்டமான ஒரு தருணம். ஏனெனில் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த ஒரு விழாவில் இசை துறையில் அவரது சேவையை பாராட்டி, 'ASIAN ARAB AWARD 2019' என்ற விருதை அவருக்கு அளித்து கௌரவப்படுத்தியுள்ளனர். இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ளும் இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறும்போது, "எல்லா புகழும் சர்வ வல்லமையுள்ள இறைவனுக்கே. எனது வேலைக்கு சர்வதேச தளத்தில் அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு கௌரவம். பஹ்ரைன், சௌதி அரேபியா, இந்தோனேசியா, ஐக்கிய...