
“காலா” பட நடிகை ஹூமா குரேசி பிறந்த தினம்
இவர் மூன்று முறை பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டார்.
குரேசி புது டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.இவர் நாடகத் திரைப்படம் மற்றும் வடிவழகியாகவும் பணிபுரிந்தார். பல நாடகத் திரைப்படங்களில் நடித்த பிறகு மும்பை சென்று ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்துடன் இரு ஆண்டுகள் ஒப்பந்தத்தில் தொலைக்காட்சி விளம்பரத்தில் நடித்தார். சாம்சங் செல்லிடத்தொலைபேசி விளம்பரத்தில் நடித்துக்கொண்டிருந்த போது இவரின் திறமையைப் பார்த்த அனுராக் காஷ்யப் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூன்று திரைப்படங்களுக்கு இவரை ஒப்பந்தம் செய்தார்.
குரேசியின் முதல் திரைப்படம் இரு பாகங்களாக வெளிவந்த குற்றத் திரைப்படமான கேங்க்ஸ் ஆஃப் வாசேப்பூர் . இந்தத் திரைப்படத்தில் துணைக் கதாப்பத்திரத்தில் நடித்தார். இதில் இவரின் நடிப்பு விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. மே...