Sunday, June 21
Shadow

Tag: Ilayaraja

மறைந்த மகேந்திரன் உடலுக்கு இளையராஜா, பாரதிராஜா அஞ்சலி

மறைந்த மகேந்திரன் உடலுக்கு இளையராஜா, பாரதிராஜா அஞ்சலி

Latest News, Top Highlights
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார். அவரது மறைவுக்கு சினிமா துறை பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறனர். நடிகர் பார்த்திபன், வைரமுத்து, நடிகை சுகாசினி ஆகியோர் தங்கள் இரங்கலை பதிவு செய்துள்ள நிலையில், சென்னை பள்ளிக்கரணை வீட்டில் வைக்கப்பட்டுள்ள இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி நடிகை ரேவதி, இயக்குநர் சிம்புதேவன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இவர்களை தொடர்ந்து இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குனர் இமயம் பாரதிராஜா ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்....
இளையராஜாவுக்கு வைரமுத்துவின் கவிதை வாழ்த்து

இளையராஜாவுக்கு வைரமுத்துவின் கவிதை வாழ்த்து

Latest News, Top Highlights
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டின் இரண்டாவது உயரிய விருதாகக் கருதப்படும் பத்ம விபூஷண் விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்கப்பட உள்ளது. இசைத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பைக் கௌரவிக்கும்விதமாக அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்படுகிறது. பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ள இளையராஜாவுக்கு கமல், ரஜினி உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்தனர். அவர்களை தொடர்ந்து கவிஞர் வைரமுத்துவும் வாழ்த்து தெரிவித்துள்ளார். வைரமுத்துவின் கவிதை வாழ்த்து பின்வருமாறு.. பத்ம விபூஷண் விருது பெறும் இளையராஜாவை “காற்றின் தேசம் எங்கும் - உந்தன் கானம் சென்று தங்கும் வாழும் லோகம் ஏழு...
இளையராஜாவிடம் கோரிக்கை வைத்த கரு.பழனியப்பன்

இளையராஜாவிடம் கோரிக்கை வைத்த கரு.பழனியப்பன்

Latest News
இளையராஜா இசையில் தற்போது உருவாகியுள்ள படம் ‘ராணி’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் தன்ஷிகா நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை சமுத்திரகனியின் உதவியாளர் பாணி இயக்கியுள்ளார். முத்துகிருஷ்ணன் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குனர்கள் சமுத்திரகனி, பேரரசு, கரு.பழனியப்பன், நடிகர்கள் மனோஜ்குமார், நமோ நாராயணன், நடிகை தன்ஷிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். இதில் கரு.பழனியப்பன் பேசும்போது, ‘நான் இதுவரை யாரிடமும் கோரிக்கைகள் வைத்ததில்லை. ஏனென்றால் கோரிக்கைகள் வைத்தால் ஏதாவது பிரச்சனை வரும். இப்போது முதன் முதலாக இளையராஜாவிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். அதாவது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா போன்று ஒரு படத்துக்கு முழுமையாக இசையமைக்க வேண்டும். ஏனெனில் இளையராஜா பல வருடங்களுக்கு முன்பு இசையமைத்...