
ஆறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் வரும் இலியானா
தமிழில் கேடி, நண்பன் படங்களில் நடித்த இலியானா தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து வந்தார். கடந்த 2012ம் ஆண்டு அவர் திடீரென தென்னிந்திய படங்களுக்கு முழுக்குபோட்டு பாலிவுட் படங்களில் நடிக்கச் சென்றார். ரன்பீர்கபூருடன் பர்பி படத்தில் நடித்தவர் தொடர்ந்து இந்தி படங்களுக்கே முக்கியத்துவம் தந்துவந்தார். இதனால் ஐதராபாத்திலிருந்து தனது வசிப்பிடத்தை கோவாவிற்கு மாற்றினார்.
இதற்கிடையில் வெளிநாட்டு புகைப்பட நிபுணர் ஆண்ட்ரு நியூபோன் உடன் டேட்டிங்கில் ஈடுபட்டார் இலியானா. அந்த நட்பு காதலாக தொடர்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் மீண்டும் தென்னிந்திய படங்களில் நடிக்க இலியானா விரும்பினார். ஆனால் அதிக சம்பளம் கேட்டதையடுத்து அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் தயங்கினர்.
தற்போது புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். டோலிவுட் நடிகர் ரவிதேஜா நடிக்கும் புதிய தெலுங்கு படம் அமர் அக்பர் ஆண்டனி...