Friday, February 7
Shadow

Tag: in

மீண்டும் கன்னட சினிமாவில் த்ரிஷா: அதிகாரபூர்வ அறிவிப்பு

Latest News, Top Highlights
கன்னடத்தில் ஏழு ஆண்டுகளுக்குப் பின்பு நடிகை த்ரிஷா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ’பேட்ட’, ’பரமபதம் விளையாட்டு’ போன்ற படங்களுக்குப் பிறகு நடிகை த்ரிஷா ‘ராங்கி’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படங்களில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் படத்திற்காக த்ரிஷா குதிரையேற்ற பயிற்சியில் சமீபத்தில் ஈடுபட்ட புகைப்படங்களும் வெளியாகி கவனம் ஈர்த்தன. இந்த நிலையில், த்ரிஷா நடிக்கும் படத்தின் அடுத்தப்பட அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. இப்படத்தை, கன்னடத்தில் பெரும் வெற்றிபெற்ற ’லூசியா’, ’யூ டர்ன்’ வெற்றிப்படங்களை இயக்கிய பவண் குமார் இயக்குகிறார். இவர், சமீபத்தில் இயக்கிய அமலாபாலின்‘குடியெடமைதே’ என்ற வெப் சீரிஸ் கவனம் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தகது. கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘பவர்’ படத்தில் கன்னட முன்னணி நடிகர்களில் ஒருவரான புனித் ராஜ்குமாருக்கு ஜோ...

பிரபல OTT தளத்தில் நேரடியாக வெளியாகும் ஜெயம் ரவியின் “பூமி”

Latest News, Top Highlights
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ஒன்று விரைவில் பிரபல OTT தளம் ஒன்றில் நேரடியாக பொங்கலுக்கு வெளியாக உள்ளதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது தியேட்டர்காரர்களை கோபப்படுத்தியுள்ளது. தற்போது இருக்கும் தமிழ் சினிமா நடிகர்களில் ஜெயம் ரவியின் படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வசூலை குவித்து வருகிறது. கடைசியாக அவரது நடிப்பில் வெளியான கோமாளி படம் வசூலில் சக்கைபோடு போட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் ஜெயம் ரவி நடிக்கும் 25வது படமான பூமி. இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. முன்னதாக ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் வெளியான பூமி படத்தின் பாடல்கள் உணர்வுப்பூர்வமாக இருந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் பூமி படத்தை நேரடியாக OTT தளத்தில் வெளியிடப்போவதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டனர். இதை சற்றும் எதிர்பார்க்கா...
கோவாவில் தொடங்குகிறது கார்த்தி-ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு

கோவாவில் தொடங்குகிறது கார்த்தி-ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு

Latest News, Top Highlights
'வயாகம்18 ஸ்டூடியோஸ்' , 'பேரலல் மைண்ட்ஸ்' இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் கார்த்தி அக்காவாக ஜோதிகா நடிக்கும் புதிய படம் கோவாவில் ஆரம்பம். ஜீத்து ஜோசப் இயக்குகிறார். கார்த்தி அக்காவாக ஜோதிகா நடிக்கும் பெயரிடபடாத “கார்த்தி/ஜோதிகா” இப்படத்தின் முதல் பார்வை அதிகாரப்பூர்வமாக வெளியானவுடனே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்படத்தை மிகவும் புகழ்பெற்ற (த்ரிஷ்யம், பாபநாசம் புகழ்) இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்குகிறார். பேரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன் சூரஜ், ‘வயாகாம்18 ஸ்டூடியோஸ்’ உடன் இணைந்து தயாரிக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க, அவருடன் ஆன்சன் பால் (ரெமோ, மாபெரும் வெற்றிபெற்ற ஆப்ரஹாமிண்டே சந்ததிகள் புகழ்) மற்றும் இன்னும் சிலரும் விரைவில் இணைவார்கள். கோவிந்த் வசந்த் (96 புகழ்) இசையமைக்க, ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நேற்று தொடங்கியது. 2019 அக்டோ...