தளபதி 63 படத்தில் இணைந்த பிரபல நாயகி
விஜயின் தளபதி 63 படம் மிக மும்முரமாக படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கும் வேளையில் பலவித செய்திகள் வந்தவண்ணம் உள்ளது இன்று முதல் பார்வை மற்றும் தலைப்பு வெளியாகும் என்ற வதந்தி அதோடு பிரபல ஹிந்தி நடிகர் ஷாருக்கான் இணைகிறார் என்ற ஒரு வதந்தி இதற்கிடையில் பிரபல நாயகி இணைந்துள்ளார் .
மேயாதமான், மெர்க்குரி, பில்லா பாண்டி, பூமராங் போன்ற படங்களில் நடித்தவர் இந்துஜா. கதாநாயகி மட்டுமின்றி வித்தியாசமான கேரக்டர்களிலும் நடித்து வரும் இந்துஜா, தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 63வது படத்திலும் நடிக்கிறார்.
பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில் விளையாட்டு வீராங்கனைகளாக சில இளவட்ட நடிகைகளும் நடித்து வரும் நிலையில், தற்போது இந்துஜாவும் கால்பந்தாட்ட வீராங்கனையாக ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கிறார்....