பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கு கொள்ள போவது யார் யார் தெரியுமா?
விஜய் டி.வியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இதன் இரண்டாவது சீசன் அடுத்த மாதம் முதல் ஒளிபரப்பாகிறது. இதற்காக பிக்பாஸ் வீடு அமைக்கும் பணி பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபியில் அமைக்கப்பட்டு வருகிறது. முதல் சீசனை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே இதனையும் தொகுத்து வழங்குகிறார்.
ஆனால் கலந்து கொள்ளப் போகிறவர்கள் யார்? யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு நல்ல விளம்பரமும், ரசிகர்களும் கிடைப்பதால் அதில் கலந்து கொள்ள நடிகர்களிடம் கடும் போட்டி நிலவுகிறது.
சேனல் வட்டாரத்தில் கசிந்த தகவல்களின் படி நடிகைகள் இனியா, ராய் லட்சுமி, ஜனனி ஐயர், சுவர்ணமால்யா, பூனம் பாஜ்வா, ப்ரியா ஆனந்த், ஆலியா மானசா, ரக்ஷிதா, ஆகியோர் கலந்து கொள்ளலாம் என்று தெரிகிறது. இவர்களுடன் சமீபத்தில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்த...