Tuesday, February 11
Shadow

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கு கொள்ள போவது யார் யார் தெரியுமா?

விஜய் டி.வியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இதன் இரண்டாவது சீசன் அடுத்த மாதம் முதல் ஒளிபரப்பாகிறது. இதற்காக பிக்பாஸ் வீடு அமைக்கும் பணி பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபியில் அமைக்கப்பட்டு வருகிறது. முதல் சீசனை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே இதனையும் தொகுத்து வழங்குகிறார்.

ஆனால் கலந்து கொள்ளப் போகிறவர்கள் யார்? யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு நல்ல விளம்பரமும், ரசிகர்களும் கிடைப்பதால் அதில் கலந்து கொள்ள நடிகர்களிடம் கடும் போட்டி நிலவுகிறது.

சேனல் வட்டாரத்தில் கசிந்த தகவல்களின் படி நடிகைகள் இனியா, ராய் லட்சுமி, ஜனனி ஐயர், சுவர்ணமால்யா, பூனம் பாஜ்வா, ப்ரியா ஆனந்த், ஆலியா மானசா, ரக்ஷிதா, ஆகியோர் கலந்து கொள்ளலாம் என்று தெரிகிறது. இவர்களுடன் சமீபத்தில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த் பங்கேற்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்கிறார்கள்.

நடிகர்களில் பரத், ஷாம், சாந்தனு, அசோக் செல்வன், ஜித்தன் ரமேஷ், ஜான் விஜய், படவா கோபி, ப்ரேம்ஜி, யூகி சேது, விஜய் வசந்த், பால சரவணன், ப்ளாக் பாண்டி, பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இவர்களுடன் பொதுவான நபர்களாக எழுத்தாளர் சாரு நிவேதிதா, அரசியல்வாதி நாஞ்சில் சம்பத், ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இரண்டாவது சீசனில் நன்கு பிரபலமானவர்களை பங்கேற்க வைக்க சேனல் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.