ஹோப்’ – நம்பிக்கையை மையமாகக் கொண்டு உலகத் தரத்தில் உருவான 30 நிமிட திரைப்பட அனுபவம்
‘ஹோப்’ – நம்பிக்கையை மையமாகக் கொண்டு உலகத் தரத்தில் உருவான 30 நிமிட திரைப்பட அனுபவம்
திரையுலகின் முன்னணி இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் வெளியிட்ட முதல் பார்வை மற்றும் டிரெய்லர்
டிரைபாட் டிராவல் புரொடக்ஷன்ஸ் மற்றும் டி.எச்.எஃப் ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ராமு கண்ணன் – தேவகி நித்யானந்தம் தயாரிப்பில், ராமு கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள 30 நிமிட படைப்பு ‘ஹோப்’.
குறும்படம் என்ற வழக்கமான வரையறைக்குள் அடங்காமல், ஒரு முழுநீள திரைப்படத்திற்கான தரம், தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு மதிப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், மனித வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு உணர்வான ‘நம்பிக்கையை’ மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
‘நாடோடிகள்’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமான அபிநயா ஆனந்த், சுரேஷ் கண்ணன் மற்றும் ராஜேஸ்வரி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
...

