Sunday, March 9
Shadow

Tag: #inthiyan2 #kamalhaasan #shankar

இந்தியன் 2 டிசம்பர் 14ம் தேதி படபிடிப்பு தொடக்கம்

இந்தியன் 2 டிசம்பர் 14ம் தேதி படபிடிப்பு தொடக்கம்

Latest News, Top Highlights
கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்தார். ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு எதிராக இந்தப் படம் எடுக்கப்பட்டது. இப்படம்தான் கமல் - ஷங்கர் இணைந்து பணியாற்றிய கடைசிப் படம். 22 வருடங்கள் கழித்து, ‘இந்தியன் 2’ இருவரும் மறுபடி இணைந்திருக்கிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. கமலின் பிறந்த நாளின் போது, இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது லைகா. தற்போது '2.0' படம் வெளியாகிவிட்டதால், முழுமையாக 'இந்தியன் 2' படத்தில் தனது கவனத்தை திருப்பியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர். இப்படத்துக்கான அரங்குகள் அமைக்கும் பணி நவம்பர் 12-ம் தேதி தொடங்கப்பட்டு மும்முரமாக நடைபெற்று வருகிறது. 'தளபதி 63' மற்றும் 'இந்தியன் 2' ஆகிய இரண்டு படங்களுக்கான அரங்குகள் பணிகளை ஒரே சேர கவனித்து வருகிறார் கலை இயக்குநர் முத்துராஜ். இப்படத்துக்...
இயக்குனர் ஷங்கர் மற்றும் உலக நாயகன் கமல் இணையும் இந்தியன் 2 படத்தில் இணையும் பாலிவுட் நடிகர்

இயக்குனர் ஷங்கர் மற்றும் உலக நாயகன் கமல் இணையும் இந்தியன் 2 படத்தில் இணையும் பாலிவுட் நடிகர்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவின் மிக முக்கிய படம் என்றால் அது கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வந்த படம் இந்தியன் என்று சொன்னால் அது மிகையாகாது 22 வருடங்களுக்குப் பிறகு ஷங்கர் - கமல்ஹாசன் `இந்தியன்-2' படத்தின் மூலம் மீண்டும் இணையவிருக்கின்றனர். கடந்த 1996-ல் வெளியாகி வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இயக்குநர் ‌ஷங்கரும், ஒளிப்பதிவாளர் ரவிவர்மனும் படப்பிடிப்பு தளங்களை சமீபத்தில் ஆய்வு செய்தார்கள். இந்த நிலையில், படத்திற்கு செட் அமைக்கும் பணிகள் பூஜையுடன் இன்று துவங்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் கலை பணிகளை டி.முத்துராஜ் கவனிக்கிறார். இவர் முன்னதாக ஷங்கர் இயக்கிய ஐ, 2.0 படங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியன்-2 முழு அரசியல் படமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தில் கமல் இரு வேடங்களில் நடிக்க இருப்பதாகவும், இந்...
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா

Latest News, Top Highlights
கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. 1996-ம் ஆண்டு மே மாதம் 9-ம் தேதி இந்தப் படம் ரிலீஸானது. அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்தார். அப்பா கமலுக்கு ஜோடியாக சுகன்யாவும், மகன் கமலுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலாவும் நடித்தனர். கமலின் மகளாக கஸ்தூரி நடித்திருந்தார். ஊர்மிளா மடோன்கர், கவுண்டமணி, செந்தில், மனோரமா, நெடுமுடி வேணு, அஜய் ரத்னம், கிரேஸி மோகன், நிழல்கள் ரவி, பொன்னம்பலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஜீவா ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். பி.லெனின் மற்றும் வி.டி.விஜயன் இருவரும் சேர்ந்து எடிட் செய்தனர். ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு எதிராக இந்தப் படம் எடுக்கப்பட்டது. சுதந்திரப் போராட்ட வீரரான அப்பா கமல், லஞ்சம் வாங்கும் மகனையே தண்டிப்பதுதான் படத்தின் ஹைலைட். வர்மக்கலையில் தேர்ச்சி பெற்றவரான அப்பா கமல...
இந்தியன் 2 கைவிடப்பட்டதா? கமல் இல்லையா தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம்

இந்தியன் 2 கைவிடப்பட்டதா? கமல் இல்லையா தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம்

Latest News
'பிக் பாஸ்' நிகழ்ச்சி முடிவு பெற்றதைத் தொடர்ந்து, 'விஸ்வரூபம் 2' படத்தின் இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் கமல். அதனைத் தொடர்ந்து 'சபாஷ் நாயுடு' படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார். இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் கமல். இப்படத்தை தில்ராஜு தயாரிக்கவுள்ளார். இந்த அறிவிப்பை 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் கமலே அறிவித்தார். இந்நிலையில், 'இந்தியன் 2' படத்திலிருந்து கமல் விலகிவிட்டதாகவும், சூர்யாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சமூகவலைத்தளத்தில் தகவல் வெளியானது. இச்செய்தி குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்டது. இது குறித்து விசாரித்த போது, "'இந்தியன் 2'வில் கமல் நடிக்கவிருப்பது உறுதி. '2.0' படத்தின் பாடல் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் சங்கர். அதனைத் தொடர்ந்து இசை வெளியீட...