மிகுந்த எதிர்பார்ப்புகளில் இன்று வெளியாகும் இரவுக்கு ஆயிரம் கண்கள்
இரவுக்கு ஆயிரம் கண்கள் டிரைலர் படத்துக்கு சரியான எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. அருள்நிதி, மஹிமா நம்பியார், அஜ்மல் நடித்திருக்கும் இந்த படம் மே 11ஆம் தேதி வெளியாகிறது. பத்திரிக்கையாளராக இருந்து இயக்குனராகி இருக்கும் மு மாறன் இயக்கியுள்ள முதல் படம்.
முன்னணி தமிழ் இதழ்களான ஆனந்த விகடன், குமுதம், கல்கி போன்ற இதழ்களில் கதைகளை எழுதிக் கொண்டிருந்த மு மாறன் இயக்குனராக அறிமுகமாக மிக முக்கிய காரணம் கிரேஸி மோகன். சுரேஷ் கிருஷ்ணா, கேஎஸ் ரவிகுமார், கேவி ஆனந்த, ராகவா லாரன்ஸ் ஆகியோரிடம் இணை இயக்குனராக பணிபுரிந்து, ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.
அடிப்படையில் எழுத்தாளரான இயக்குனர் மாறன், இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் புதுவிதமான கதை சொல்லும் திறனை கையாண்டிருக்கிறார். "Non linear எனப்படும் பாணியில் கதை சொல்வது தான் படத்தின் மிகப்பெரிய ஹைலைட்...