ஹிந்தியிலும் கலக்கும் விக்ரமின் “இருமுகன்”
‘சீயான்’ விக்ரம் நடிப்பில் வெளியாகி, பாக்ஸ் ஆபிசில் கோடிக்கணக்கில் வசூலித்து, பாக்ஸ்ஆபிஸ் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் நூறு கோடி கிளப்பில் லேட்டஸ்ட்டாக இணைந்த படம் ‘இருமுகன் ’. இந்தபடம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு பிரபலமான தனியார் தொலைகாட்சியில் அண்மையில் ஒளிபரப்பானது. அதன் பின்னர் யூடியூப் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டது. பதிவேற்றப்பட்ட இரண்டு நாளில் ஐந்து மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று புதிய சாதனையை படைத்திருக்கிறது.
மணிரத்னம் இயக்கிய ‘ராவண் ’ படத்தில் நடித்ததன் மூலம் ஹிந்தியிலும் தனக்கான ரசிகர்களை உருவாக்கியவர் ‘சீயான் ’விக்ரம். அதனைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கிய ‘ஐ ’படத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்புத்திறமையை காட்டி பாலிவுட் டின் முன்னணி நடிகர்களை ஆச்சரியப்படுத்தினார். அனைத்து ஊடகங்களும் சிறந்த நடிப்பிற்கான தேசிய விருது விக்ரமுக்கு கிடைக்கும் என்று பதிவு செய்தது. இதில் உச்சமா...