
சுந்தர்.c நாயகனாக நடிக்கும் திரில்லர் படம் “இருட்டு”
வெள்ளிக்கிழமை என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது, அன்றைய தினம் வெளிவரக் கூடிய புதுப் படங்களின் பட்டியல் தான். ஆனால் தற்போதோ, புதுப்படங்கள் என்றில்லாமல் திகில், த்ரில், பேய் படம் போன்ற வகையான படம் ஏதாவது ஒன்றாவது வந்துவிடாதா? என்பது தான் மக்கள் எதிர்பார்ப்பின் உச்சம். அதுக்கேற்றால்போல், நாளுக்கு நாள் இது போன்ற படங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மக்களும் அதையேத்தான் அதிகம் விரும்புகின்றனர். பயப்பட வேண்டும் என்னும் நோக்கத்தோடு வரும் மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய இயக்குநர்களும் ஆர்வமாக இருக்கின்றனர்.
அதைச் சரியாக புரிந்த கொண்ட இயக்குநர் துரை.VZ இருட்டு என்ற படத்தை இயக்குகிறார். அவர் இப்படத்தைப் பற்றி கூறியதாவது :-
‘இருட்டு’, ஏற்கனவே வெளியான பேய் படம், திகில், த்ரில்லர் போன்றில்லாமல் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். அதாவது கற்பனையாக நமது நிஜ வாழ்வில் ஒரு பேயோ, பிசாசோ...